"என்ன சாப்படலாம், டாக்டர் ?"
" இட்லி , கஞ்சி ஏதாது குடுங்கோ. பன் இல்லேன்னா பிரட் சாப்படலாம். "
படவா காச்சலா நானான்னு பாத்திருவோம் என்று மிகவும் பிற்பட்ட நகச் சுவையை வழங்குவார் டாக்டர்.
எனது காய்ச்சல் நாட்கள் பன்னோடு தொடங்கி புண்ணாய்ப் போகும்.
"பால் வேணுனா தொட்டுக்கோடா" என்று எதோ "கூகிள்" நிறுவனத்தின் ஐந்நூறு ஷேர்களை எனக்கு எழுதி வைத்தது போல் வெற்று பெருந்தன்மை பயில்வாள் அம்மா.
"பால் வேணுனா தொட்டுக்கோடா" என்று எதோ "கூகிள்" நிறுவனத்தின் ஐந்நூறு ஷேர்களை எனக்கு எழுதி வைத்தது போல் வெற்று பெருந்தன்மை பயில்வாள் அம்மா.
சிறு வயதில் "இண்டஸ்ட்ரி சுற்றுலா" என்ற பெயரில் "பன் பேக்டரி" கூட்டிச்சென்ற போதுகூட , சுவரில் சிறுநீர் கொண்டு வர்ணம் தீட்டும் கலையில்தான் கவனம் இருந்தது. "மடார்" என்று தலையில் அறைந்து மிஸ் "பன்" தயாரிக்கும் முறையை அறிய அறிவுறித்தியதில் இருந்தே தீர்மானம் செய்தது - ஒன்று- பெண் டீச்சர் நடமாடும் இடங்களில் நூதன சிறுநீர் வரை களை பயில்வதில்லை! இரண்டு - எனக்கும் பன்-னுக்கும் உறவு அற்றது.
பல வருடங்கள்s கழித்து துணிக்கடையில் மானைவிக்காக் தேவுடு காக்கும் போது எதிர்ப்படும் பால்ய நண்பனைக் கண்டவுடன் குசலம் மற்றும்n இயலாமை enபாராட்டிவிட்டு , "அட, இவன் ஆறாவது வகுப்பில் நோட்டைக் கிழித்த பாஸ்கர் ஆச்சே" என்று தோன்றுமே..அதே தருணம். இந்த சந்திப்பு எனக்கும் பன்-னுக்கும் ஆனது.
பரிணாம வளர்ச்சியில், பன் இன்று சற்றே உயர்வான ஒரு நிலையில் உள்ளது. இரண்டு பன்-களைஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி , நடுவே உபத்திரவம் பிடித்த ஒரு காய்கறி உருளையாய் தட்டையாக அடித்து , திணித்து ஒரு மாபெரும் மைதா பஞ்சு உருளையை உருவாக்கி அதனை பர்கர் என்கிறார்கள்.
பன்றி இறைச்சியோ, வேஜிடபிலோ கொண்டு "பாட்டி" எனப்படும் நாடு உருளையை தயார் செய்கிறார்கள். பன்றி பாட்டி என்றால் ஹாம் பர்கர். வெஜிடேரியன் பாட்டி என்றால் வெஜி பர்கர். எனது ரெண்டு பாட்டியும் வெஜி என்பதாலும் நானும் வெஜி என்பதாலும் எனக்கு வெஜி பாரகர் தோது படும் என்று தோன்றுகிறது.
சாணி கரைத்து அடுப்பை அலம்பி விடுவதில்லை என்பதாலும், மடி பார்த்து சமைப்பதில்லை என்பதாலும் எனக்கு பர்கரில் உடன்பாடு இல்லை. தவிரவும் பன் மற்றும் பாட்டி விலகாமலிருக்க நுடுவே பல் குத்தும் கூர்மையான ஒரு குச்சியை வேறு சொருகி விடுகிறார்கள்.எங்கே முருகனுக்கு அலகு குத்திய மாதிரி ஆகிவிடுமோ என்ற பயத்திலேயே பர்கரைக் கண்டாலே உதறுகிறது.
இதற்க்கு மேலாக என்னதான் பரிணாம வளர்ச்சி , உலக மயமாக்கல் என்று நூல் விட்டாலும் ,பன்உக்கு நடுவில் அவியல் , முட்டைகோசு போட்டு உண்பது, ஏதோ புல் மீல்ஸை இலையோடு மடக்கி உண்பது போல ஒவ்வாத ஒரு செயலாகவே தோன்றுகிறது. இதற்கு மேல் பவுசாக வெங்காயம் பத்திரகாளி பல் போல வாய்க்கு வெளிய கொஞ்சமும் உள்ளே கொஞ்சமும் புட் போர்டு பார்ட்டிபோல தொங்காமலும் , முட்டைகோசு முழுமையும் உள்ள இருக்குமாறு, பார்த்துக்கொண்டும் , மோச ரெல்லா வெளியே பிதுங்கி வழியாமலும் மிக கவனமாக பசியாற வேண்டியுள்ளது
பனி கட்டிக்கு பிறந்த ஒருத்தி வேறு "ஆர் யு ஆல் செட்" என்று வேறு அறை வினாடிக்கு ஐம்பது முறை நலம் விசாரித்து போவாள். மோவாயை தொட்டு டேம்பெரச்சர் பார்காத குறை தான். ஆமாண்டி, ஆல் செட்டு தான். செட்டு தோசையும் வட கறியும் சாப்பிட வேண்டிய என்னை பன்னும், பொறையும் போட்டு கொன்னுட்டு இது வேறயா?